|
அழியாது
விடுதலைப்போர் !
எழும் தமிழினம் வெகுண்டு! - வெடித்து
எழும் தமிழீழம் மீண்டு!
விழும் பகையினம் சுருண்டு! - வணங்கித்
தொழும் உலகமே திரண்டு!
அனைத்துலக நாடுகளின் பெரும்படைகள்
ஆதிக்க வெறிகொண்டு அணிதிரண்டு
சிங்கள காடையர்க்குத் துணைநின்று
செந்தமிழ் இனத்தையே சிதைப்பதுவா?
கண்ணெதிரே கொடுமையெல்லாம் அரங்கேற
கைநீட்ட முடியாத பேரவலம்!
கருணையின்றி நடக்கின்ற படுகொலைக்கு
கைகொடுக்கும் இந்தியாவின் பெருந்துரோகம்!
தமிழரை அழித்தொழிக்கும் கொடுமையினை
தடுத்திட வேண்டுமென கதறினோமே!
தமிழக உணர்வுகளை மதிப்பதற்கு
தவறியது இந்தியா துரோகம்தானே!
சிறுத்தைகள் பற்றவைத்த பெருநெருப்பு!
செந்தமிழ் நாடெங்கும் கொந்தளிப்பு!
சிங்கள கொடுமைக்குப் பேரெதிர்ப்பு!
செய்ததே இந்தியா அவமதிப்பு!
தமிழீழ மக்களைக் காப்பதற்கு
தாவியொரு நாடேனும் வந்ததுவா?
தாயுள்ளம் மனிதநேயம் மொத்தமாக
தரையுலகில் இல்லாமல் அழிந்ததுவா?
அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட
அனைத்துலக நாடுகளின் ஆதரவில்
அழித்தொழிக்கும் வெங்கொடுமை ஈழமண்ணில்!
ஆனாலும் அழியாது விடுதலைப்போர்!
அடங்கி உழலும் அடிமை வாழ்வா?
விடுதலைக் களத்தில் வீரச்சாவா?
வீரச்சாவை வாரி அணைக்கும்
விடுதலைப்புலிகளுக்கு ஏதுசாவு?
புலிகளை அழித்ததாய் பூரிக்கின்றான்!
போரும் முடிந்ததாய் அறிவிக்கின்றான்!
புரட்சியின் பொருளே புரியாத
பொறுக்கிகள் எப்போதும் இப்படித்தான்!
சிதறட்டும் கொழும்பு!
- செம்மொழி ஞாயிறு காசி ஆனந்தன்
இருக்கிறான் தலைவன் பிரபாகரன் நீ
நம்படா நம்பு!
ஈழத் தமிழினம் வாழப் போர்க்களம்
கிளம்படா கிளம்பு!
திருமா தலைமையில்
போர் தொடக்கு!
சிங்கள வெறியன்
திமிர் அடக்கு!
ஈழம் தமிழர்கள் தாய்மண் இல்லையாம்
மகிந்தா குதிக்கிறான்!
இறந்து விழுந்த நம் தமிழர் பிணங்களை
காலால் மிதிக்கிறான்!
காலம் அழைக்குது! ஈழம் அழைக்குது!
கடலைத் தாண்டுவோம்!
களத்திலே ஈழ நிலத்திலே நாமும்
நெருப்பைத் தூண்டுவோம்!
சிறுத்தை படை ஈழப் புலிகள் படை இரண்டும்
ஒன்றுதான் கிளம்பு!
சினந்து புயல் நெஞ்சில் சுமந்து கிளம்படா!
சிதறட்டும் கொழும்பு!
வெறுத்து வாடா உன் உயிரை நெஞ்சிலே
புயலைத் தூக்குவோம்!
வெறியர் சிங்களர் கொடியர் சூழ்ச்சிகள்
சிதறத் தாக்குவோம்!
உலகில் என்றைக்கும் புலிகள் ஓய்ந்ததாய்
வரலாறில்லையே!
உறுமி எழும்கடல் அலைகள் ஓயுமா?
இல்லை! இல்லையே!
கலகம் இல்லாமல் உலகம் திருந்தாது!
களப்போர் ஆடுவோம்!
கயவர் சிங்களர் படையை வென்று நாம்
வாகை சூடுவோம்!
-------------------------------------
விரைவில் வருவான் பிரபாகரன்
- அம்பேத்கர் சுடர் அறிவுமதி
எவன்டா சொன்னது
இல்லேன்னு!
அப்படிச்
சொன்னா
அவன
சொல்லுடா
ராஜபக்சே
புள்ளேன்னு!
தமிழ்த் தாயின்
செல்லப்
பிள்ளை
இவனை
வெல்ல
எவனும்
இல்லை!
எரிமலைத் தேரே
பிரபாகரன்
வெகு
விரைவினில்
நேரே
வருவானவன்!
மானம் காக்கும்
பெரு
மூச்சு!
தமிழ்
வானம் நெடுக
இவன்
பேச்சு!
உலகத்
தமிழரின்
உயிர்
மூச்சு!
எம்
துயரைத்
தீர்க்கும்
கதிர்
வீச்சு!
எரிமலைத் தேரே
பிரபாகரன்!
வெகு
விரைவினில்
நேரே
வருவானவன்!
ஈழம்
செயல்
வீச்சு
கடல்
ஆழம் பூக்கும்
புயல்
ஆச்சு!
புலிகள்
உரிமையின்
சுடு
மூச்சு
என்
திருமா
சிறுத்தைகள்
விடும்
மூச்சு
எரிமலைத் தேரே
பிரபாகரன்
வெகு
விரைவினில்
நேரே
வருவானவன்! |