எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் 1980 களிலிருந்து எழுதிய கவிதைகளைக் கண்டெடுத்து பாடல்களாக வடிவமைத்துக் கொண்டிருக்கும்போது ஒலிப்பதிவுக் கூடத்திற்கே வந்து பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது இசையமைப் பாளர் இலக்கியன், ஆவணக் காப்பகத்தின் மாநிலத் துணைச் செயலாளர் இசையரசு ஆகியோர் புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து தலைவரை ஒரு பாடல் எழுதக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அரை மணி நேரத்தில் எழுச்சித்தமிழர் எழுதிய பாடல்வரிகள்...
தன்னால முளைச்சி
வந்த தலைவருங்க
நாட்ட தலகீழா
புரட்டிப்போட்ட போராளிங்க
இருட்ட எரிச்சவரு
இழிவத் தொடைச்சவரு
ஏழ சனங்களுக்கு
எரிமலையாய் வெடிச்சவரு
ஆயிரங்காலமாக
ஆட்டம் போட்டவங்க
ஆணவத்த அடியோட
அறிவால சுட்டாருங்க
ஆண்ட சாதிகிட்ட
அடிமாடா கிடந்தவங்க
அரசால முடியுமுன்னு
அரசியல் சொன்னாருங்க
புராண இதிகாசம்
புளுகிவச்ச கதையெல்லாம்
புத்தரின் நெருப்பால
பொசுக்கிப் போட்டாருங்க
மனசாட்சியில்லாம
மநுதர்மம் சொல்லிவச்ச
குடிகெடுக்கும் நீதியெல்லாம்
குழிதோண்டிப் புதைச்சாருங்க
உழைச்சிப் பொழைக்கிறவ
ஒதுக்கப்பட்ட சாதியின்னு
இழிவுசெய்யும் இந்துமத
இடுப்ப முறிச்சாருங்க
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்
சரிசம உரிமைன்னு
அரசியல் சட்டத்தில
அழுத்தமாச் சொன்னாருங்க
|
முகப்பு |
|