ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர் ஜெயலலிதா
- தொல்.திருமாவளவன்

 

தி.மு.க.வுடன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொள்கை அடிப்படையிலான உறவு கொண்டதை முதலமைச்சர் கருணாநிதி கடந்த வாரம் அறிவித்தார். தேர்தல் கூட்டணிக்காக இல்லாமல் சாதி ஒழிப்பு, சமத்துவக் கொள்கை ரீதியில் பெரியார், அண்ணா வழியில் செயல்படுவதை மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அப்போது சுட்டிக்காட்டினார். இதை விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த பாராட்டு மடலாக கருதுகிறேன்.

கூட்டணி உறவை மனப்பூர்வமாக ஏற்று, மகிழ்ச்சி யோடு தேர்தலை சந்திக்கிறோம். ஈழத்தமிழர் ஆதரவுக்காக எங்கள் குரல் வலுவாக ஒலிக்கும். இலங்கைத்தமிழர்கள் வாழ்விற்காக தி.மு.க. எவ்வளவோ செய்துள்ளது. அதற்காக எத்தனையோ இடர்பாடுகளை சந்தித்துள்ளது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. பிரதமரை சென்று சந்தித்தது, மனிதச் சங்கிலி நடத்தியது போன்ற வற்றில் முதல் - அமைச்சர் கருணாநிதி முன் நின்றார். இலங்கைத் தமிழர்கள் மீது மிகுந்த அக்கறை வைத்துள்ள தி.மு.க.வுடன் தேர்தல் உறவு வைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இலங்கையில் வாழும் தமிழ் இனத்திற்கு எதிராக பேசியவர் அ.தி.மு.க பொதுசெயலாளர் ஜெயலலிதா. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும், விடுதலைப்புலிகள் சரண்அடைய வேண்டும் என்று தமிழ் ஈழத்திற்கும், தமிழ் இனத் திற்கும் எதிராக பேசியவர் ஜெயலலிதா. ஆனால், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு காட்டுவதுபோல, உண்ணாவிரதம் என்ற ஒரு நாள் கூத்தை நடத்தினார். அ.தி.மு.க., தி.மு.க.வுடன் ஒப்பிட முடியாத கட்சி, ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் அதிமுக நேர் எதிரான கட்சி.
அதிமுக கூட்டணியில் சேராதவர்கள் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் சேர்வது ஈழத் தமிழர்களுக்கு எதிரானது. ஆளும் கட்சி தி.மு.க.வுடன் இணைந்து, இலங்கை பிரச்சினையில் மத்திய அரசை வலியுறுத்த முன்னெடுத்துச் செல்வோம்.

16-3-2009 அன்று, கோபாலபுரத்தில் முதலமைச்சரை சந்தித்துவிட்டு
வெளியேவந்த எழுச்சித்தமிழர் செய்தியாளர்களிடம் பேசியதிலிருந்து...

 

முகப்பு

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann