செந்தட்டி ஈசுவரன், பரமசிவம் படுகொலை

சங்கரன் கோவிலில் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

ரூ. 50,000 நிதி அளித்து எழுச்சித்தமிழர் ஆறுதல்

 

திருநெல்வேலிமாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமம் செந்தட்டி. இங்கு தேவேந்திரர்குல மக்களும், வேளாளர், யாதவர், செட்டியார் வகுப்பினர் சராசரி மக்கள் தொகையுடன் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள முத்தராம்மன் கோயில் விழாவை அனைத்து சமுதாய மக்களும் சரிசமமாக விழா எடுப்பதும் கோவில் நிகழ்ச்சியில் பங்கு கொள்வதும் உண்டு. சில ஆண்டுகளாக இந்த உரிமை தேவேந்திரகுல மக்களுக்கு மறுக்கப் பட்டுள்ளது. செட்டியார் சமுதாயத்தைச் சேர்ந்த சில சமூக விரோதிகள் தேவேந்திரகுல மக்களுக்கு எதிராக யாதவ மக்களைத் தூண்டி விடுவதும் அவர்களுக்கு எதிராக சாதி ரீதியாக மோதலை ஏற்படுத்தியும் வந்தனர். இந்நிலையில், சுரேசு என்ற தாழ்த்தப்பட்ட வாலிபர் தாழ்த்தப்பட்ட மக் களின் எழுச்சி பாடலை தனது வீட்டில் போட்டுள் ளார். இதைக்கேட்ட செட்டியார் வகுப்பைச் சார்ந்த மகாலிங்கம் என்பவர் யாதவர் மக்களை தூண்டி விட்டு, “இவர்களுக்கு எல்லாம் எவ்வளவு திமிர்” என்று கூறி 22.2.2009 அன்று சுரேஷை என்ற செருப்பால் அடித்து தாறுமாறாக தாக்கியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட தேவேந்திரகுல மக்கள் ஆண்கள், பெண்கள் அனைவரும் தாக்கப்பட்டனர்.

இதையடுத்து நடந்த மோதலில் 23ம் தேதி பரமசிவன், ஈஸ்வரன் என்ற இரு வாலிபர்கள் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். செந்தட்டி கிராம மக்கள் ஊரை காலிசெய்து சங்கரன்கோயிலில் உள்ள சமுதாயக்கூடத்தில் உயிர்களையும் உடைமை களையும் இழந்து தஞ்சம் அடைந்துள்ளனர். இதை கேள்வியுற்ற விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உடனடியாக  கண்டன அறிக்கை விட்டதோடு இல்லாமல் துணைப் பொதுச்செயலாளர் கலைவேந்தன், இன்குலாப், மாவட்டச்செயலாளர் தமிழினியன் ஆகியோரை அனுப்பி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் அளிக்கச்சொன்னார்.

இந்நிலையில், விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் குண்டர் தடுப்புச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டங்களில் கைது செய்யப் பட்ட 26 விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் இயக் குநர் சீமான, கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் ஆகியோரை விடுதலை செய்யக் கோரி நாடு முழுவதும் கடந்த 17.3.2009 அன்று ஆர்ப்பாட்டத்தை நடத்த சிறுத்தை களுக்கு வழிகாட்டினார். அந்த வகையில் கடந்த 17.3.2009 அன்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் சங்கரன் கோவிலில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். செந் தட்டியில் நடந்த படுகொலையை கண்டித் தும் இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக பாதிக் கப்பட்ட செந்தட்டி தேவேந்திரகுல மக்களை எழுச்சித்தமிழர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அங்கிருந்த செந்தட்டி கிராம மக்கள், தலைவரிடம் தங்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமையையும் தங்கள் படும் துயரங் களையும் ஊர் திரும்ப முடியாத கொடுமை யையும் அங்கு தங்களுக்கு உரிய பாது காப்பு இல்லை என்று கதறி அழுதனர். இதைக்கேட்டு எழுச்சித்தமிழர், “ஒன்றும் கவலைப்படவேண்டாம்  நம்முடைய விடுதலைச்சிறுத்தைகள் உங்களுக்கு பாது காப்பாக இருப்பார்கள். இது (செந்தட்டி) நம்முடைய மண்; நமது பாட்டன் முப் பாட்டன் வியர்வை சிந்தி உழைத்த மண் இந்த மண்ணில் தகுந்த பாதுகாப்பும், சம உரிமையும்  விடுதலைச்சிறுத்தைகள் பெற்றுத் தரும்.  இக்கொலைக்கு காரண மானவர்கள் கைது செய்யப்படுவார்கள் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும்” என்று தைரியம் சொல்லி, படுகொலை செய்யப்பட்ட ஈஸ்வரன் மற்றும் பரமசிவம் குடும்பத்திற்கு தலா ரூ. 25,000/- என மொத்தம் ரூ.50.000/-ம் வழங்கினார். சமூகக்கூடத்தில் தங்கியிருந்த செந்தட்டி மக்களுக்கு உணவு அளிக்க தொகையும் வழங்கினார்.

பின்னர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைப்பெற்ற ஆர்ப் பாட்டத்தில் தலைவர் திருமாவளவன் கண்டன உரை நிகழ்த்தினார். “சாதிக் கொடுமை தடுக்கப்பட வேண்டும் பாதிக்கப்பட்ட தேவேந்திரகுல மக்களுக்கு உரிய  உரிமை கொடுக்கப்பட வேண்டும். படுகொலை செய்யப்பட்ட ஈஸ்வரன், பரமசிவன் ஆகியோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தரவேண்டும்” இக்கொலைக்கு காரணமான சாதி வெறியர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஒரு சாரர் கட்சியல்ல இது எல்லா மக்களுக்குமான பொதுக்கட்சி எங்கே மக்கள் ஒடுக்கப் படுகிறார்களோ அங்கே விடுதலைச்சிறுத்தைகள் திமிறி எழும்.  இக்கட்சியில் அனைத்து சாதி மக்களும் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சாதி, மதங்களை ஒழித்து விடுதலைச்சிறுத்தைகளாக பணியாற்றுகிறார்கள் என்று பேசினார்.  ஆர்ப்பாட்டத்தின் முடிவில் திருநெல்வேலி பி.ஜே.பி. கட்சியின் எஸ்.சி.எஸ்.டி. மாவட்டத் தலைவர் எம்.சி.கார்த்திக் மற்றும் சுதாகரன்,  தங்களுடைய ஆதரவாளர்களுடன் எழுச்சித்தமிழர் அவர்களின் தலைமையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் மு.கலைவேந்தன், ஏ.சி.பாவரசு, ஆர்வலன், தெய்வமுகிலன், மாவட்டச்செயலாளர் செல்லையா பாண்டியன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஜே.மோகன், ஜீவன், செந்தமிழ் பாண்டியன், வழக்கறிஞர் அரசு பிரபாகரன், பால்ராஜ், சோ.சு.தமிழ்இனியன், கிருபாகரன், விநாயகம், தமிழ்வேந்தன் உட்பட திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

முகப்பு

 

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann