|
தலையங்கம்:
தேர்தல் கூட்டணி
ஈழ விடுதலைக்கே எதிரான அதிமுக மாற்று சக்தியா?
தமிழக அரசியல் வரலாற்றில் இது ஒரு முதல் பதிவு. தாழ்த்தப்பட்ட வகுப்பினரை முதன்மையாகவும் பெரும்பான்மையாகவும் அணிதிரட்டி, அமைப்பாக்கி, இயங்கிவரும் ஓர் அரசியல் கட்சி, வலுவானதொரு கட்சியின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று, இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது இதுதான் முதல் நிகழ்வு.
நேர்காணல்:
“திருமாவளவனை விமர்சிப்பவர்கள்
உண்மையான ஈழ விடுதலை ஆதரவாளர்களாக
இருக்க முடியாது”
- காணொளி Z தமிழ் தொலைக்காட்சி சந்திப்பு : சுதாங்கன் ;
உண்மையான ஈழ ஆதரவாளர்கள் இந்தக் களத்தில் உண்மையாகப் போராடியவன் திருமாவளவன் என்பதை உணர்ந்து கொள்வார்கள். அப்படி திருமாவளவனை விமர்சிக் கிறவன் எவனும் உண்மையான ஈழ விடுதலை ஆதரவாளனாக இருக்கமுடியாது என்பது என் னுடைய கருத்து. ஏனென்றால் நான் போலித் தனமாக ஈழப் பிரச்சினையில் தலையிடவில்லை. இன்று மட்டும் இல்லை என்றைக்கும், எங்கே இருந்தாலும் ஈழத்தமிழர் ஆதரவில் மிகத் தெளிவாக உறுதியாக இருக்கிறது விடுதலைச்சிறுத்தைகள்.
கவிதை:
காலச்சக்கரம்
யுகபாரதி
மூங்கிலுக்குள் மட்டுமே
முடங்கிய காற்றை
மூச்சுக் குழலுக்குள்
மடைமாற்றும் காலமிது
தன்னால முளச்சி வந்த தலைவருங்க
தொல்.திருமாவளவன் 
தன்னால முளைச்சி
வந்த தலைவருங்க
நாட்ட தலகீழா
புரட்டிப்போட்ட போராளிங்க
இருட்ட எரிச்சவரு
இழிவத் தொடைச்சவரு்.
ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர் ஜெயலலிதா
திருமா
இலங்கையில் வாழும் தமிழ் இனத்திற்கு எதிராக பேசியவர் அ.தி.மு.க பொதுசெயலாளர் ஜெயலலிதா. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை கைது செய்ய வேண்டும், விடுதலைப்புலிகள் சரண்அடைய வேண்டும் என்று தமிழ் ஈழத்திற்கும், தமிழ் இனத் திற்கும் எதிராக பேசியவர் ஜெயலலிதா
செந்தட்டி ஈஸ்வரன், பரமசிவம் படுகொலை:
சங்கரன் கோவிலில் சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்
|