எழுச்சித்தமிழர் தலைமையில் சிறுத்தைகள் போர்க்குரல்
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்பட்டுக்கிடக்கும் ஈழத்தமிழர்கள் கடந்த 13.7.2009 முதல் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். வழக்குகளை விரைந்து முடிக்கக் கோரியும், உடனடியாக அனைவரையும் சிறப்பு முகாமிலிருந்து சாதாரண முகாமுக்கு மாற்றக்கோரியும் சிறப்பு முகாமில் 60பேர் உண்ணாவிரதம் இருந்தனர்.
உண்ணாநிலைப் போராட்டத்தை கேள்விப்பட்ட எழுச்சித்தமிழர் உடனடியாக தலைமைநிலையச் செயலாளர் வன்னி அரசுவை செங்கல்பட்டு சிறப்பு முகாமுக்கு அனுப்பி நிலைமையை கேட்டறிய ஆணையிட்டார். அதன்படி வன்னி அரசு, காஞ்சிமாவட்ட இளஞ்சிறுத்தைகள் செயலாளர் செங்கை தமிழரசன், நகரச்செயலாளர் அன்புச்செல்வன், இளஞ்சிறுத்தைகள் மாநில கனல்விழி, சட்டக்கல்லூரி மாணவர்கள் அரச முதல்வன், பேரறிவாளன் உட்பட ஏராளமான தோழர்கள் சிறப்பு முகாம்முன் நின்று அனுமதி கேட்டனர். அனுமதி இல்லாததால் குறிப்புகளை கேட்டறிந்து எழுச்சித்தமிழரிடம் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து உடனடியாக செங்கல் பட்டிலும் சென்னையிலும் சிறப்புமுகாமில் வதைபடும் ஈழத்தமிழர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த எழுச்சித்தமிழர் ஆணையிட்டார். அதன்படி கடந்த 29.7.2009 அன்று சென்னையிலும் செங்கல்பட்டிலும் ஆர்ப்பாட்டம் ஒருங் கிணைக்கப்பட்டது.
சென்னை அரசு பொதுமருத்துவமனை எதிரில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப் பாட்டத்தை மாவட்டச்செயலாளர்கள் வீரமுத்து, கபிலன், இளஞ்செழியன் ஒருங் கிணைத்தனர். மாவட்ட நிர்வாகிகள் இரா.செல்வம், புதூர் தினகரன், சேத்துபட்டு இளங்கோ, விடுதலைச்செல்வன், பகலவன், சாரநாத், புரட்சிதாசன், பார்வேந்தன், பெரம்பலூர் ராஜ்உள்ளிட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைப்புக்கு களப்பணியாற்றினர். பொதுச்செயலாளர் கா.கலைக்கோட்டுதயம், பொருளாளர் முகமது யூசுப், தலைமை நிலையச்செயலாளர்கள் ஏ.சி.பாவரசு, வன்னி அரசு, ஊடகப்பிரிவு செயலாளர் செ.அறிவமுதன், தொழிலாளர் விடுதலை முன்னணி செயலாளர் வனச்செழியன், செய்தித்தொடர்பாளர் ஆர்வலன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளராக பாலபிரஜாபதி அடிகளார் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நிறைவாக, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் எழுச்சித்தமிழர் உரையாற்றினார். “தமிழகத்தில் உள்ள சாதாரண முகாம்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. துணி - சேலைகளால் தடுக்கப்பட்டு அங்கு மக்கள் குடியமர்த்தப்படுகின்றனர். வழக்குகளை முடிக்காமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவர் மீதும் விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்ததாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்திதான் சிறைப்படுத்தியுள்ளனர். ஆகவே, சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்து பொதுமுகாமுக்கு மாற்றவேண்டும்; வழக்குகளை விரைந்து முடிக்கவேண்டும்; அகதிகள் உரிமைகளுக்கான அவையில் இந்தியா கையெழுத்திட்டு அகதிகள் உரிமைகளை காப்பாற்றவேண்டும்” இவ்வாறு எழுச்சித்தமிழர் உரையாற்றினார்.
இதேபோல் செங்கல்பட்டிலும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்டச்செயலாளர் சூ.க.விடுதலைச்செழியன் தலைமைதாங்கினார். செங்கை தமிழரன் வரவேற்றார். மாவட்டத் துணைச்செயலாளர்கள் சிறுத்தை கிட்டு, பூவிழி, தே.தென்னவன், காஞ்சி அம்பேத், செய்தித் தொடர்பாளர் நெமிலி கோமகன், கலைவடிவன், அ.நா. இளையவளவன் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ரவிக்குமார், ச.ம.உ. கண்டன உரை நிகழ்த்தினார். பார்வேந்தன், எழில் கரோலின், வெற்றிச்செல்வன், கராத்தே பாண்டியன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
|