மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே, மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மின்சாரத்துறைக்கு நிதி ஒதுக்கும் கோரிக்கை மீதான இந்த விவாதத்தில் கலந்துகொண்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்கு வாய்ப்பினை வழங்கியமைக்காக அவைத் தலைவர் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகை இயக்குவதும், ஒளிமயமாக வைத்திருப்பதும் மின்சாரம் என்பதை நாம் நன்கறிவோம். எந்த ஒரு நாடு மின்சார உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறதோ அந்த நாடு பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் வலிமை மிக்கதாக இருக்கிறது. அந்த வகையில் உலக நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்தியா பின்தங்கி இருக்கிறது என்பதை நாம் நன்கறிவோம்.
இயற்கை வளங்களும் மின் உற்பத்திக்கான மூல ஆதாரங்களும் நம்மிடத்தில் ஏராளமாக இருந்தும்கூட அதை நாம் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் நம்மிடத்தில் உள்ளீடான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருக்கிறது. அதனால்தான் இன்னும் நாம் வளர்ச்சியடையாத நிலையிலே வளர்முகத்தில் இருந்துகொண்டு இருக்கிறோம்.
இன்றைக்கு இந்தியாவின் பெரும் பகுதியான குக்கிராமங்கள், இலட்சக்கணக்கான குக்கிராமங்கள் மின்சாரத்தையே பார்க்காத கிராமங்களாகப் பின்தங்கி உள்ளன. இந்தியாவின் பெரும்பகுதி இருண்டு கிடக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த தேர்தலின் போது ‘இந்தியா ஒளிர்கிறது’ என்று சொன்னவர்களை கிராமப்புறத்து மக்கள் புறம் தள்ளினார்கள்; உதறி எறிந்தார்கள்; தூக்கி எறிந்தார்கள்! ஏனென்றால், இந்தியாவின் பெரும்பகுதி இருண்டே கிடக்கிறது.
இந்த நிலையில் நாம் ஒன்றை எண்ணிப்பார்க்கக் கடமைப் பட்டவர்களாக இருக்கின்றோம். பெஞ்சமின் ஃப்ராங்ளின், மைக்கேல் ஃபாரடே, தாமசு ஆல்வா எடிசன் போன்ற மகத்தான விஞ்ஞானிகள் கண்டுபிடித்த இந்த மின்சாரம் ஏறத்தாழ 300 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் குக்கிராமங்களை எட்டிப் பார்க்காத நிலையில் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் மிக முதன்மையான கடமையாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் இந்திய அரசு ‘அனைவருக்கும் மின்சாரம்’ என்கிற திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. இந்தப் பதினோராவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் ‘அனைவருக்கும் மின்சாரம்’ என்கிற அறிவிப்பை இந்திய அரசு வெளியிட்டிருக் கிறது. அனைத்துத் தரப்பும், அனைத்துப் பகுதியும், அனைத்து மனிதர்களும் சேர்ந்து வளர வேண்டும் என்கிற ‘ஒருங்கிணைந்த வளர்ச்சி’ என்பது இந்திய அரசின் கொள்கையாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.
ஆனால், இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்கள் இன்னும் மின்சாரத் துறையிலே வளர்ச்சியடையாமல் இருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். இந்த நிலையிலே இந்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து இருக்கிறது. மின் உற்பத்திக்குத் தண்ணீரைப் பயன்படுத்தியும், வெப்பத்தைப் பயன்படுத்தியும், அணு உலைகளைப் பயன் படுத்தியும் மின்சாரத்தைத் தயாரிப்பதற்கு மேலும் பல புதிய திட்டங்களை அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், ‘ருடவசய ஆநபய ஞடிறநச ஞசடிதநஉவ’ என்கிற ‘மாபெரும் மகத்தான மின் உற்பத்தித் திட்டங்களை’ அறிவித்து, அந்தத் திட்டங்களைத் தமிழ்நாட்டில் செய்யூர், கடலூர் ஆகிய பகுதிகளில் நடைமுறைப் படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால், அது அப்படியே கிடப்பில் உள்ளது.
அது மட்டுமில்லாமல், 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே, கூடங்குளம் அணுமின்உலைத் திட்டம் தொடங்கப்பட்டு இன்னும் அது நிறைவு பெறாத நிலையில் தேங்கிக் கிடக்கிறது. கால நீட்டிப்புத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் 8000 மெகா வாட் மின் உற்பத்திக்கான ஓர் ஒப்பந்தத்தில் இரஷ்யா அரசாங்கத்தோடு இந்திய அரசு கையெழுத்திட்டு இருப்பதாகவும் தெரிகிறது. அது எப்போது தொடங்கவிருக்கிறது என்பதும் தெரியவில்லை. ஜெயங்கொண்டத்திலே மின் உற்பத்தித் திட்டம் அறிவிக்கப்பட்டு அதுவும் அப்படியே கிடப்பில் உள்ளது. இப்படிப் பட்ட நிலையில், தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதையும் உணர வேண்டியிருக் கிறது. ஆந்திராவில் ‘கிருஷ்ணா - கோதாவரி பேசின்’ என்கிற பகுதியிலே இயற்கை எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது. மும்பையில் ‘பாம்பே ஹை’ எனும் இடத்தில் கிடைக்கிற எரிவாயு மிகப்பெரும் அளவில் வட மாநிலங்களில் பயன்படுகிறது.
அதைப்போல ஆந்திராவில் ‘கிருஷ்ணா - கோதாவரி பேசின்’ என்கிற பகுதியிலே கிடைக்கிற ‘இயற்கை எரிவாயு’ தென் மாநிலங்களுக்குப் பயன்படக்கூடிய வகையிலே இந்திய அரசு திட்டங்களைத் தீட்ட வேண்டும். ஆனால், ரிலையன்சு கம்பெனியும், குஜராத் பெட்ரோலியம் கார்பரேசன் என்கிற நிறுவனமும், அரசாங்கத்தின் ஓ.என்.ஜி.சி. என்கிற நிறுவனமும் அந்த இயற்கை எரிவாயுவை தயாரிக்கிற பணிகளில் ஈடுபட்டிருக் கின்ற நிலையில், அது வடமாநிலங்களுக்குப் பயன்படக்கூடிய வகையிலே வேலைகள் நடக்கின்றன. குறிப்பாக, ரிலையன்சு நிறுவனம் குஜராத், மகாராட்டிரா மாநிலங்களுக்கு இயற்கை எரிவாயுவை கொண்டு வருவதற்கான குழாய்களை அமைத்து, அந்தப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது.
ஆனால், 2007ஆம் ஆண்டு நம்முடைய பெட்ரோலிய அமைச்சகம் என்ன ஒப்புதல் அளித்ததென்றால், தென் மாநிலங்களுக்கு குறிப்பாக, தமிழ்நாட்டுக்கு, ஆந்திராவுக்கு இந்த இயற்கை எரிவாயு வழங்கப்படும் என அறிவித்திருந்தது. தமிழக முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் கருணாநிதி அவர்கள் பிரதமர் அவர்களைச் சந்தித்து அது தொடர்பாக முறையிட்டும் கூட இதுவரையில் அதற்கான வேலைகள் எதுவும் நடக்கவில்லை. காக்கிநாடா, நெல்லூர், சென்னை வழியாகக் குழாய்களை அமைத்து எரிவாயுவைக் கொண்டுசென்று தமிழகத்தில் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதே தவிர, அது கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
‘இன்க்ளுசிவ் குரோத்’ (inஉடரளiஎந பசடிறவா) என்று நம்முடைய பிரதமர் அறிவித்து இருக்கிறார். நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்களும் அதனையே குறிப்பிட்டிருக்கிறார். அப்படி ‘ஒருங்கிணைந்த வளர்ச்சி - சமமான மேம்பாடு’ என்கிறபோது, எந்தப் பகுதியும் புறக்கணிக்கப்படக்கூடாது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக நடத்தப்படவேண்டும். அனைத்து மாநிலங்களிலும் திட்டமிட்டு இவற்றையெல்லாம் செயல்படுத்திட வேண்டும். எனவே, மின்சாரத்துறையில் இன்றைக்கு நெய்வேலியைத் தவிர மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டில் உற்பத்தி எங்கும் இல்லை. அதற்கான திட்டங்கள் இல்லை. சூயவiடியேட கூhநசஅயட ஞடிறநச ஊடிசயீடிசயவiடிn, சூயவiடியேட ழலனசடி ஞடிறநச ஊடிசயீடிசயவiடிn ஆகியன அரசாங்கத்தின் நிறுவனங்கள். ஆனால், அவற்றின் மூலமான திட்டங்கள் எதுவும் தமிழகத்தில் இல்லை.
எனவே, மின் உற்பத்திக்கான திட்டங்களை தமிழ்நாட்டிலும் தென்மாநிலங்களிலும் பரவலாகக் கொண்டு வருவதற்கு இந்திய அரசு கவனம் செலுத்தவேண்டும்; திட்டமிடவேண்டும். நெய்வேலியில் உற்பத்தியாகின்ற மின்சாரத்தின் பெரும் பகுதியை தமிழ்நாட்டில் பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அங்கே வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். 5000 ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் ‘ஐனேஉடி ளுநசஎந ளுடிஉநைவல’ என்கிற பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
|

ஆனாலும் அது இன்னும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வில்லை. நெய்வேலி நிறுவனம், நிலக்கரித் துறை அமைச்சகத்தின் கீழ் இருப்பதாக மாண்புமிகு அமைச்சர் சுசில் குமார் சிண்டேஜி அவர்கள் நான் கேட்டபோது சொன்னார். நிலக்கரித் துறை அமைச்சகத்தின் கீழ்வரக்கூடிய நெய்வேலி அனல்மின் நிலையத்தை, மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரவேண்டும். ஏனென்றால், அது மின் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் மின்சார உற்பத் திக்கான திட்டங்களை மிகத் தீவிரமாக நடைமுறைப் படுத்தவேண்டும் என்று கேட்டு வாய்ப்புக்கு நன்றி கூறி அமைகிறேன். நன்றி. வணக்கம்.
21-7-2009 அன்று மின்துறையின் கோரிக்கை
மீதான விவாதத்தில் எழுச்சித்தமிழர் ஆற்றிய உரை
|
முகப்பு |