தமிழ்த் தேசியத்தை

விழுங்க முயற்சிக்கும் சிங்களத் தேசியம்

- தொல்காப்பியன்

இராணுவரீதியாகத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட் டத்தை அடக்கிய சிங்கள அரசு, இப்போது வரலாற்றுரீதியாக அவர் களை அடிமைப்படுத்தி, தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் முயற்சி யில் இறங்கியுள்ளது. தமிழ் மக்க ளின் விடுதலைப் போராட்டத்தின் ஆணி வேரே - வடக்கும் கிழக்கும் தமிழரின் மரபுவழித் தாயகம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களுக்கு தன்னாட்சி உரிமை உள்ளது ஆகிய விடயங்கள் தான். தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்து, அவர் களின் தனித்துவமான தேசிய அடையாளங்களை அழிப்பதன் மூலம் தன்னாட்சி உரிமைக்கான எழுச்சியையும் கோரிக்கையையும் பலவீனப்படுத்துவதுதான் சிங்களத் தின் நாசகாரத் திட்டம்.

தமிழீழ விடுதலைப்புலிகளை இராணுவரீதியாகச் சிதைத்துள்ள நிலையில் - எதிர்காலத்தில் புலி களின் எச்சங்களே நாட்டில் இருக் காத வகையில் - சிங்களம் நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த கட்டமாக ‘ஈழம்’ என்ற வார்த்தையையே இல்லாமல் செய்வதற்கு சிங்கள அரசாங்கம் குறிவைத்திருக்கிறது.

ஈழம், தமிழ், முஸ்லிம் போன்ற வார்த்தைகளைக் கொண்ட கட்சி களின் பெயர்களைத் தடைசெய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகத் தகவல் கள் வெளியாகின்றன. இது எதிர்காலத் தில் ‘ஈழம்’ என்ற பெயரிலோ, அல்லது தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும்  தனித்துவமான கட்சிகள் - அமைப்புகள் இயங்குவதை, தோன்று வதை முழுமையாகத் தடைசெய்ய எடுக்கப்படும் நடவடிக்கை யாகும். தேர்தல் திணைக்களத் தின் ஊடாக அரசியல் கட்சி களின் பெயர்களை மாற்றி யமைக்கக் கொடுக்கப்படுகின்ற நிர்ப்பந்தமானது - தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கு சிங்களத்தின் மீது அரசாங்கம் கொண்டிருக்கின்ற கரிசனை யையே பிரதிபலிக்கின்றது.

இதைச் செய்துவிட்டால் நாட்டில் ஒருமைப்பாடு வந்து விடும், பிரிவினை ஏற்படாது என்று கருதுகிறது இலங்கை அரசு. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் தற்போது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் எதுவுமே இப்போதைய பெயர்களில் இயங்க முடியாது. இனம் ஒன்றைப் பிரதிநிதித்துவம் செய்யும் அல்லது பிரதேசம் ஒன்றின் பிரதிநிதித்து வத்தை வெளிப்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் செயல்படக் கூடாதென்று அரசாங்கம் சட்டம் ஒன்றைக் கொண்டுவருவதன் மூலம் எந்த வகையிலும் ஒருமைப் பாட்டை ஏற்படுத்திவிட முடியாது.

கட்டாயமாக நிர்ப்பந்தத்தின் பேரில் செய்யப்படும் இத்தகைய எந்த நடவடிக்கையுமே சிறுபான்மை மக்களிடத்தில் இன்னும் அதி கமான வெறுப்பையும் பிரிந்து போகும் எண்ணத்தையுமே ஏற் படுத்தும். சிங்களம் மட்டும் ஆட்சி மொழி என்ற சட்டத்தைக் கொண்டு வந்தது. எத்தகைய நிலையை ஏற்படுத்தியது என்பதை இலங்கை அரசு இன்னமும் புரிந்து கொள்ள வில்லை போலும்.


ஆனால், சிங்கள அரசின் நோக்கம் பிரிவினையைத் தடுப் பதோ ஒருமைப்பாட்டைப் பேணு வதோ அல்ல. அதன் ஒரே நோக்கம் சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து இனங்களையும் அனைத்து மொழி பேசும் மக்களையும் உள்வாங்கிக் கொள்வதுதான். பயங்கரவாதம் என்ற போர்வையில் தமிழர்களின் காப்பரணான விடுதலைப் புலி களை வெற்றிகொண்ட பின்னர் நடத்திய விழாவில் பேசிய மகிந்த ராஜபக்ச, இனிமேல் நாட்டில் சிறுபான்மை இனங்கள் என்று எதுவுமில்லை என்று கூறியிருந் ததை மறந்துவிடக் கூடாது. அதாவது அனைத்து இனங் களையும் சிங்களத்துக்குள் உள் வாங்கிக் கொள்வதுதான் அவரது திட்டம். சாத்தியமானால் - தமிழ்த் தேசியமே இல்லாமல் போய், அனைவரும் சிங்களத் தேசியத்துக் குள் சிக்கிக்கொள்ள நேரிடும். இப்படியான நிலையில் இருந்து தனித்துவமான வகையில் தமிழ்த் தேசிய இனத்தால் போராட்டங் களை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும்.

இலங்கைத் தேசியம் அல்லது சிங்களத் தேசியத்துக்குள் அனைத்து மக்களையும் உள்வாங்கிக் கொண்டு தமிழ்த்தேசியத்தையும் முஸ்லிம் தேசியத்தையும் இல்லாது அழித்து விடுவதே அவர்களின் நோக்கம். இது வெறுமனே மகிந் தவின் கனவு மட்டுமல்ல. ஐ.தே.க. வின் தரப்பில் இருந்து இது போன்ற தொரு கருத்து முன்வைக்கப் பட்டிருந்ததை மறந்துவிட முடி யாது. ஈழம் என்பது அரசியல் ரீதியாகத் தோற்கடிக்கப்பட வில்லை. இன்னமும் ஈழம் என்ற பெயரில் அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. அனைத்துத் தமிழ்க் கட்சிகளினது பெயர் களிலும் ஈழம் என்பது இருக் கிறது. எனவே, ஈழம் என்பதை அரசியல்ரீதியாகவும் தோற்கடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது ஐ.தே.க. இது, இலங்கையின் இரு பெரும் சிங்களக் கட்சிகளி னதும் பேரினவாதச் சிந்தனை கள் ஒன்றுபட்டிருப்பதை வெளிப் படுத்தும் விடயமாகும்.

தமிழ்த் தேசியத்தை சிதைத்து சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் மக்களின் வாழ்வை அடிமைப் படுத்துவதே சிங்களத்தின் திட்டம். புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை உருவாக்கினார். ஆனால், பின்னர் கருணாவைத் தனித்து இயங்க சிங்களத் தேசியம் விடவில்லை. வளைத்துப் போட்டு சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கிக் கொண்டது. பிள் ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பெயரை மாற்றும்படி மகிந்தாவும் அவரது  சகோதரர் களும் கருணாவுக்கு பெரும் நெருக்கடிகளைக் கொடுத்தனர். ஆனால், அது சாத்தியமற்றதாகிப் போக, அந்தக் கட்சியையே இல்லாதொழிக்கும் வகையில் ஒவ்வொருவராக சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கொண்டு வரும் இரகசிய நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் இறுதிக் கட்டத்தில் பிள்ளையானும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உள்வாங்கப்படுவார். இதுதான் சிங்களத் தேசியத்தின் சதி.

கிழக்கில் மோசடிகளின் மூலமும், கிழக்கைப் பிரதிநிதித் துவம் செய்வதாகக் கூறிக் கொண்ட கட்சிகளின் முதுகில் சவாரி செய்தும் சிறீலங்கா சுதந் திரக் கட்சி ஆட்சியைப் பிடித்தது. வெற்றிலையின் கீழ் பிராந்தியக் கட்சிகளைப் போட்டியிட வைத்து கிழக்கில் வெற்றி பெற்றது போன்று - வடக்கிலும் அழுத் தங்களைக் கொடுத்து தமிழ்க் கட்சிகளை அதுபோன்று போட்டி யிட வைத்திருக்கிறார் மகிந்த ராஜபக்சே. அரசாங்கத்தின் நிர்ப்பந் தங்களால், வடக்கில் ஈ.பி.டி.பி., சிறி ரெலோ, ஈரோஸ் போன்ற கட்சிகள் வெற்றிலைச் சின்னத் துக்குள் உள்வாங்கப்பட்டிருக் கின்றன. இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிலையை வெற்றிபெற வைத்து தமிழ்த் தேசியம் சிதைக்கப்பட்டு விட்டது - சிங்களத் தேசியமே வடக் கிலும் கிழக்கிலும் ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைச் சிங்கள மக்களுக்கும், வெளியுலகுக்கும் பிரகடனம் செய்வதுதான் மகிந்த வின் திட்டம்.

வடக்கே பருத்தித்துறை தொடக்கம் தெற்கே தெய் வேந்திரமுனை வரைக்கும் ஒரே கொடி - சிங்கக்கொடிதான் பறக்கிறது என்று கூறிப் பெருமைப் பட்ட சிங்களத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையே இது. வடக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து தெற்கே தங்காலை வரைக்கும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிதான் ஆட்சி செய் கிறது என்ற சிங்களத் தேசியத்தை உசுப்பிவிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறது மகிந்தாவின் அரசு. சிங்களத் தேசியத்தின் இந்த இரகசியச் சதிக்கு தமிழ் அரசியல் சக்திகள், ஊடகங்கள் பலவும் பலியாகிக் கொண்டிருக் கின்றன என்பதுதான் வேதனை யான விடயம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவரீதியாகப் பலமாக இருக்கும் வரைக்கும் அவர் களோடு இருந்து - அவர்களின் பின்னணியில் இயங்கிய இந்தச் சக்திகள் இப்போது சிங்களத் தேசியத்துக்கு வால்பிடிக்க முற்படு வதுதான் வேடிக்கை. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினர் ஒருவர் அவசரக் காலச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக் காமல் இருந்திருக்கிறார். காரணம் கேட்டால், இடம் பெயர்ந்த வன்னி மக்களை குடியமர்த்த அரசின் உதவி தேவையாம். அதற்காகவே எதிர்க்கவில்லை என்று சப்பை நியாயம் சொல்கிறார். அவசர காலச் சட்டத்தைப் பயன்படுத்தித் தான் இலங்கை அரசு மூன்று இலட்சம் மக்களையும் ஆடு, மாடுகளைப் பட்டியில் அடைப்பது போன்று - முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கிறது என்பது அவருக்குத் தெரியாதா என்ன? இதே அவசரக்காலச் சட்டம்தான் இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வுக்குத் தடையாக இருக்கிறது என்று புரியாதா என்ன? ஆனாலும் இப்படி ஒரு நியாயத்தைச் சொல்லித் தப்பிக்க முனைகிறார் என்றால் தமிழ்த் தேசியம் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா அவர்? அதைவிட மோசமானது - தந்தை செல்வாவும், பிரபாகரனும் தமிழ்த் தேசியத்துக் காகப் போராடி தோற்றுப் போனவர்களாம் - இனியும் தமிழ்த் தேசியம் பேசிப் பயனில்லை என்று கொச்சைப் படுத்துகிறார்.

அரசுக்கு கால்பிடிப்பதும் வால்பிடிப்பதும்தான் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் என்று புதிய வழி காட்ட முயலும் இவர்களெல்லாம் எப்படித் தலை யெடுத்தார்கள் என்று ஒருமுறை திரும்பிப் பார்க்கட்டும். அதைவிட தமிழ்த் தேசியத்துக்காகப் போராடி மடிந்தவர்கள் எல்லாம் மடையர்கள் போன்று குறிப்பிடும் அவர் சிங்களத் தேசியத்துக்கு கால் பிடித்து விட்டவர்களால் என்னத்தைக் கிழிக்க முடிந்ததென்று ஒரு கனம் நினைத்துப் பார்க்கட்டும். சிங்களத்துக்குக் கால் பிடிப்பவர்களால் - ஒரே ஒரு நிமிடம் மட்டும், அகதி முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் மக்களை வெளியே கொண்டுவந்துவிட முடியுமா? அதையே செய்ய முடியாதவர்கள் - தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்திக் கொண்டு அரசுக்குப் பின்னால் நிற்கப் போகிறார்களாம். இவர்களையெல்லாம் தமிழ்த் தேசியத்தின் பிரதி நிதிகளாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்த தற்காக யாரை நோக முடியும்?

சிங்களத் தேசியத்துக்குள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கிக்கொண்டு தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கின்ற சதி இப்போது உச்ச கட்டமாக நடந்து கொண்டிருக்கிறது.  வடக்கில் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கைகள் தெற்கில் வலுப்பெறுகின்றன. கலப்புக் கிராமங்களை உருவாக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் சிங்களத்தின் காவலர்கள்.
வடக்கில் மீள்குடியமர்வுக்கு முன்னதாக அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைக் கண்டறியும் புதைபொருள் ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட வேண்டும் என்கிறார்கள். இவையெல்லாம் வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களின் மரபுவழித் தாயகம் அல்ல என்று காண்பிக்க மேற்கொள்ளப் படும் முயற்சிகளே. முப்பதாண்டுப் போரின் பின்பாதிக் காலத்தில் தமிழ் மக்களின் பலம்மிக்க தலைமைச் சக்தியாக விளங்கும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் தமிழ்த் தேசியத்தை வரலாற்றுரீதியாக அழிக்கின்ற முயற்சி கள் எதுவும் கைகூடவில்லை.

இந்த இடைவெளியை நிரப்பி சிங்களத் தேசியமே இலங்கைத்தீவு முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது என்று உறுதி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தக் கட்டத்தில் தமிழ்த்தேசியம் சற்று உறங்கிப் போனாலும் அதை விழுங்கி ஏப்பம்விட்டுக் கொண்டு போய்விடும் சிங்களம். இதனைத் தடுப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒரே குரலாக ஒலிப்பது அவசியம். எம்மிடையே உள்ள வேறுபாடுகள் பலவீனங் களைக் களைந்து ஒரே குரலாக

ஒலிப்பதுதான் தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்ற தமிழீழத் தேசியத் துக்காகப் போராடிய, களமாடிய மாவீரர்களின் கனவுக்குக் கொடுக்கும் மரியாதையாக அமையும்.
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எரிவதுண்டோ?...

*****************************

 


முகப்பு

 

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann