இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக நிவாரணப் பொருட்களுடன் அய்ரோப்பி யாவில் இருந்து வந்த வணங்காமண் கப்பலை சென்னை துறைமுகத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. கண்டனம் தெவித்துள்ளார். இதுத் தொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “வன்னிப் பகுதியில் வதை முகாம்களில் சிக்கிச் சிதைந்து வரும் ஈழத்தமிழர்களுக்கு என அய்ரோப்பியா வாழ் தமிழர்கள் கடந்த மே மாதம் சுமார் 884 டன் எடையுள்ள உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ‘கேப்டன் அலி’ என்னும் ‘வணங்காமண்’ கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர்.
ஈவு இரக்கம் இல்லாத சிங்கள இனவெறியர்கள் அதனை அனுமதிக்கவில்லை. சுமார் 2 மாதங்களாக அந்தக் கப்பலும் ஓர் அகதியைப் போல, நடுக்கடலில் தத்தளித்துத் தவிக்கிறது. அந்தக் கப்பலில் பணி யாற்றும் ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்கு வழியின்றி தவிக்கின்றனர்.
சென்னைத் துறைமுகத்தில் அப்பொருட்களை இறக்குவதற்கு இந்திய அரசும் அனுமதி அளிக்க வில்லை என்பது இந்திய அரசின் ஈரம் இல்லாத அரக்கத்தன்மையை வெளிப்படுத்துகிறது. அப் பொருட்களை தமிழ்நாட்டில் உள்ள அகதிகளுக்கு வழங்குதவற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும், அதனை விடுதலைச்சிறுத்தைகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பெரும் முயற்சிகளை மேற் கொண்டோம். ஆனால், அதிகாரிகள் அதற்கு ஒப்புதல் அளிக்க வில்லை என்பதுடன் அக்கப்பலை வெளியேறும்படி எச்சரித்துள்ளனர். ‘இந்தியனைவிட சிங்களவனே மேல்’ என்று கூறும் அளவிற்கு இந்திய அரசின் போக்கு கொடூரமாக உள்ளது. இந்திய அரசின் தமிழன விரோத, மனித நேயமற்ற போக்கை விடுதலைச்சிறுத்கைள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
- 24-06-2009 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை
விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் வெறுமனே இப்படியான ஓர் அறிக்கையை வெளியிட்டுவிட்டு சும்மா இருந்திட வில்லை. இருள் கப்பியச் சூழலுக்குள் தள்ளப்பட்ட ஈழத்தமிழர்களின் வாழ்வு எழுச்சித்தமிழரை வதைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால்தான் நாடாளுமன்றத்தில் தமது முதல் உரையில் இந்தியா ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் செய்துவிட்டது என்று துணிச்சலாக முழங்கினார். வதை முகாம்களில் சிக்கியிருக்கும் ஈழத்துச் சொந்தங்களின் கண்ணீரைத் துடைக்க கடந்த 7-6-2009 அன்று அய்ரோப்பியத் தமிழர்கள் அனுப்பி வைத்த ‘வணங்காமண்’ கப்பலை சிங்கள அரசு கடந்த 13-6-2009 அன்று திருப்பி அனுப்பியது. திருப்பியடிக்கப்பட்ட கப்பல் சென்னை துறைமுகத்தில் அடைக்கலம் புகுந்தது. சிங்கள அரசு என்ன செய்ததோ அதைவிட மோசமாக நடந்துகொண்டது இந்திய அரசு. குடிக்கத் தண்ணீர்கூட இல்லாமல் கப்பல் ஊழியர்களான 15 சிரியர்கள் நடுக்கடலில் தவித்துக் கொண்டிருந்தனர். உடனடியாக இலண்டனிலிருந்து எழுச்சித்தமிழரைத் தொடர்புகொண்டு உதவி கோரினர். எழுச்சித்தமிழரும் துறைமுக இயக்குனரைத் தொடர்பு கொண்டு உதவி கோரினார். உடனடியாக 200டன் தண்ணீர் கப்பலுக்குப் போய்ச் சேர்ந்தது.
இலங்கை செல்ல தடைவிதிக்கப்பட்ட ‘வணங்காமண்’ கப்பலில் வெடி பொருட்கள் இருப்பதாகச் சென்னை காவல்துறை உளவுத்துறை அதிகாரிகளும் பயம் காட்டினார்கள். ஆனால், எழுச்சித்தமிழர் “ஈழத்தமிழர்களுக்கு சேர வேண்டிய பொருட்கள் இலங்கைக்கு போகவில்லையென்றால், எங்களிடம் ஒப்படையுங்கள். தமிழகத்தில் உள்ள அகதிகளுக்குத் தருகிறோம்” என்கிற கோரிக்கையை வைத்தார். வணங்காமண் கப்பலை அனுப்பிய ‘மெர்ஷி மிஷன்’ தலைவர் டாக்டர் பூர்ணசந்திரனிடம் இதற்கான உரிமையையும் கோரினார். இது தொடர்பாக என்ன செய்ய வேண்டும்? யாரைப் பார்க்க வேண்டும் என எழுச்சித்தமிழர் பணித்தார்.
முதலில் துறைமுகப் போக்குவரத்து அதிகாரியைச் சந்தித்தோம், அவரோ, “இதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை” என்று ஒரு ‘ஷிப்பிங்’ முகவரை தொடர்பு கொள்ளச் சொன்னார். கிருஷ்ணமூர்த்தி என்கிற அந்த முகவரை நாம் சந்தித்த போது, “கேப்டன் அலி கப்பலிலிருந்து எனக்கு உத்தரவு வரும் வரை நான் எதுவும் செய்ய முடியாது” என்றார்.
நாமும் சலிக்காமல் மீண்டும் ‘வணங்காமண்’ கப்பலை அனுப்பி வைத்த ‘மெர்சி மிஷன்’ தலைவர் டாக்டர் பூர்ணசந்திரன் மற்றும் டாக்டர் மூர்த்தி ஆகியோரைத் தொடர்புகொண்டு கப்பலில் உள்ள பொருட்களை சிறுத்தை களிடம் ஒப்படைக்கும்படிக் கோரினோம். “தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்காகத் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி, உண்மையாகப் போராடும் போராளி திருமாவளவன் அண்ணனிடம் ‘வணங்காமண்ணை’ ஒப்படைப்பதில் பெருமை யடைகிறோம்” என்று சொல்லி கடந்த 24-6-2009 அன்று விடுதலைச் சிறுத்தைகளிடம் வணங்காமண்ணை ஒப்படைப்பது தொடர்பான உரிமை கடிதத்தை நமக்கு அனுப்பினர்.
அதுவரை சென்னை துறைமுகத்திலேயே நிற்கக்கூடாது என்று விரட்டி யடிப்பதிலேயே குறியாக இருந்த தில்லி அதிகாரிகளின் போக்கு திடீரென மாறியது. அன்று இரவே தில்லி வந்தடைந்தார் பசில் ராசபக்சே. “கப்பல் வேண்டாம்; பொருட்களை மட்டும் அனுப்பி வையுங்கள்” என்று கூறிவிட்டு விருந்தை முடித்துவிட்டு கொழும்பு பறந்தார். இதற்கிடையே நமக்கு அப்பொருட்களுக்கான ரசீதும் சுங்கத்துறைக்கு கட்ட வேண்டிய பணம் எவ்வளவு என்பதையும் ‘மெர்சி மிஷன்’ நிறுவனத்திலிருந்து நமக்கு அனுப்பப்பட்டது. உடனடியாக நாம் ‘ஷிப்பிங்’ முகவர் கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்து நமக்கு வந்து சேர்ந்த அத்தனை கடிதங்கள், ரசீதுகளை ஒப்படைத்தோம். கிருஷ்ணமூர்த்தி யும் மிகவும் உற்சாகமாகப் பாராட்டி “தமிழகத்தில் நீங்களாவது இது தொடர் பாக முயற்சி எடுக்கிறீர்களே, நான் ‘கேப்டன் அலி’ கப்பல் உரிமையாளரிடம் பேசுகிறேன்” என்றார்.
இதற்கிடையே நமக்கு ‘கேப்டன் அலி’ கப்பல் உரிமையாளரிட மிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் “ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான உரிமம் பெறவில்லை என்பதால் உங்களிடம் ‘வணங்காமண்’ணில் உள்ள பொருட்களை ஒப்படைக்க இயலாது” என்று நமது தலை வருக்கு வந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது. இந்நிலையில் தான் ஊடகங்களில் ‘வணங்காமண்’ கப்பலில் உள்ள பொருட்கள் இலங் கைக்குச் செல்கிறது என்று தலைப்புச் செய்தியாக வந்தது. அதாவது, ‘கொலரடா’ என்கிற கப்பல் மூலம் பொருட்களை இலங்கை கொண்டு சொல்கிறார்களாம். வணங்கா மண் கப்பல் இலங்கைத் துறைமுகத்திற் குள் வந்தால் அதை வெடிக்க வைத்து விடுவார்கள் என்கிற பயமாம்.
பரிதவித்துக் கொண்டிருக்கும் ஈழத்துச் சொந்தங்களுக்கு உதவ வந்த ‘வணங்காமண்’ கப்பலுக்கு வந்த சோதனைகளைக் கண்டும் காணாமல் விட்டிருந்தால் தமிழ கத்தில் கரை சேர்ந்திருக்குமா? விடுதலைச்சிறுத்தைகள் இந்த முயற்சியில் ஈடுபடும் போதே “அதை எப்படி உங்களுக்கு கொடுப் பார்கள்” என்று கேட்டார்கள். அவர் களின் கேள்விக்குள் ‘வணங்காமண் சிறுத்தைகளிடம் போய்ச் சேரக் கூடாது’ என்கிற உள்நோக்கம் ஒளிந் திருந்ததே தவிர உண்மையான அக்கறை இல்லை. ஈழத்துச் சொந் தங்களை காக்கிற புலிகளின் உண் மையான உறவு சிறுத்தைகள் என்பதை உறுதி செய்துதான் நம் மிடம் ஒப்படைக்க ‘மெர்ஷி மிஷன்’ முடிவு செய்தது.
எப்படியானாலும் சிறுத்தைகள் எடுத்த முயற்சி வெற்றியில்தான் முடிந்திருக்கிறது. ‘வணங்காமண்’ கப்பலில் உள்ள பொருட்கள் வவுனியா வதைமுகாம்களில் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கும் வரை சிறுத்தைகளின் போராட்டம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
|