நீ
பூமத்திய ரேகையின்
மையப்புள்ளி
எங்கள் சுழற்சி
உன்னைச் சுற்றியே
நீ
காலத் தேனடையின்
கர்ப்பக்கிரகம்
எங்கள் பிரார்த்தனை
உன்னைப் பற்றியே
உன்
மெல்லிய புன்முறுவல்
எங்கள் பகல்களின்
ஒத்திகைப் பாடல்
உன்
நித்திய சிந்தனைகள்
எங்கள் மாற்றங்களின்
தோற்றுவாய்
இன்றைய வரலாறை
நாளைய வரலாறுகள்
மொய்த்திருக்கின்றன
முத்தமிடும்
உன் இதழ்கள்
யுத்த காண்டத்தின்
முதல் வார்த்தை
வெடிகுண்டை
காவல் காக்கின்றன
மலர்செண்டுகள்