|
தலையங்கம்:
தமிழ்ச் சமூகத்திற்கு
இந்திய அரசு துரோகம் !

ஈழத் தமிழர்கள் சிக்கல் குறித்துமிகுந்தகவலை கொண்டுள்ளன. இந்தியா, தமிழ்ச் சமூகத்திற்கு துரோகம் இழைத்துவிட்டது என்பதைவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே,இந்தியா தமிழர்களுக்கு எதிரான தனது போக்கை மாற்றிக் கொண்டு எமது தமிழ்ச் சொந்தங்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நம்பிக்கை நட்சத்திரம் :
“சிதம்பரத்தில் முளைத்தது நம்பிக்கை நட்சத்திரம்
செந்தமிழர் வாழ்வில் உருவாகும் சமத்துவம்!”
இந்தியத் தேர்தல் வரலாற்றில், குறிப்பாகத் தமிழகத் தேர்தல் வரலாற்றில் 2009 மே மாதம் 13ஆம் நாள் நடந்த தேர்தல் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். எல்லாவிதமான அரசியல் கணக்குகளின் யூகங் களையும் மாற்றிப்போட்டு நம்பவே முடியாத காட்சிகளை காட்டியத் தேர்தல்.
தமிழீழ விடுதலைப்போராட்டம்
உலகத்தமிழர்கள் சோர்வடையாமல் ஒருங்கிணைந்து முன்னெடுத்துச்செல்லவேண்டும்!
கடந்த 6 மாத காலமாக தமிழக மக்களும் புலம் பெயர்ந்து வாழும் உலகத்தமிழர்களும் எவ்வளவோ மன்றாடிக்கேட்டும் கடுமையாகப் போராடியும் இந்தியாவோ சர்வதேசச்சமூகமோ எமது ஈழத்தமிழ்ச் சொந்தங்களைக் காப்பாற்ற முன்வரவில்லை என்பது எக்காலத்திலும் ஆற்றுப் படுத்த முடியாத வேதனையை அளிக்கிறது.

சமரசமற்றத் தலைமை
- இ. தலையாரி
எமது தமிழினச் சூரியன் எவரும் அறியாது
எங்கோ தலைமறைவாயிருக்கிறது.
இருளாக விழித்திருப்போம்
அது திரும்பிவரும் வரையில்.... .
இவன் ஒற்றை நட்சத்திரம்!

- தணிகைச்செல்வன்
தில்லையில் நுழையவே தடுக்கப்பட்ட நந்தன்
தில்லியில் நுழைகிறான் தில்லையின் தலைவனாய்
மேதகு பிரபாகரன் தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம்!:
- 18-5-2009 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை
ஓரே நாளில் 50 ஆயிரம் தமிழர்கள் படுகொலை:
எழுச்சித்தமிழர் தலைமையில் சிறுத்தைகள் வீரவணக்கம்
‘ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்’:
ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க உருவானது
|