மேதகு பிரபாகரன் தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம்!:

-- 18-5-2009 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை

 

அய்.நா. பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகமும் விடுத்த கோரிக்கைகளையும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கோரிக்கையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சிங்கள இனவெறி யர்கள் போர்முனையில் சிக்கியுள்ள பொதுமக் களையும் புலிகளையும் ஒட்டுமொத்தமாக அழித் தொழிக்க வேண்டுமென ஈவிறக்கமற்றக் கொடூரத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

சிதறிக்கிடக்கும் தமிழர்களின் உடல்களை அப்புறப்படுத்துவதற்கும் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண் டிருக்கும் மக்களையும் பாதுகாப்பதற்கும் செஞ் சிலுவைச் சங்கத்தினரை அனுமதிக்க முடியாதென தடை விதித்துள்ளனர். இந்நிலையில் எந்த நொடி யிலும் உலகத்தையே உலுக்கக்கூடிய கொடூரமான இனப்படுகொலை நடந்தேறலாம். இத்தகைய நெருக் கடியான சூழலிலும் இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் அமைதிகாப்பதும் வேடிக்கை பார்ப்பதும் சகித்துக்கொள்ள முடியாத அவலமாகவுள்ளது.


புலிகள் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள். அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வுகாண வேண்டுமென்பதுதான் சனநாயக பூர்வமான அணுகுமுறையாகும். புலிகளின் தலைவர்களை ஒட்டுமொத்தமாக அழித்தொழித்துவிட்டு பின்னர் ஈழத்தமிழினத்தையே ஆயுள்கால அடிமைச் சமூகமாக மாற்ற சிங்கள இனவெறிக் கும்பல் திட்ட மிட்டு செயலாற்றி வருகிறது.

எனவே, ஈழத்தமிழர்களை, அவர்தம் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் அவர்களது பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளையும் பாதுகாத்திட வேண்டும். எனவே, மக்களை மீட்கிறோம் என்கிற பெயரில் புலிகளை அழித்தொழிக்கத் தீவிரம் காட்டுகிற சிங்கள இன வெறியர்களின் போக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். காயம்பட்டவர்களைப் பாதுகாக்கும் வகையில் செஞ்சிலுவைச்சங்கத்தினரை பாதிக்கப் பட்டப் பகுதிகளில் அனுமதிக்க வேண்டுமெனவும் சுமார் 48 மணி நேரத்திற்கு இடைக்கால போர் நிறுத்தத்தை அறிவிக்கவேண்டுமெனவும் இந்திய அரசு சிங்கள அரசை உடனடியாக வற்புறுத்த வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் தொடர்பாக வெளிவரும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.


18-5-2009 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை

 

முகப்பு

 

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann