சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இசை நிகழ்ச்சி சிறுத்தைகளை உசுப்பேத்தியது. எழுச்சித்தமிழர் மேடையேறியதும் சிறுத்தைகளின் வரவேற்பு முழக்கங் களும் கரவொலிகளும் சென்னையை உலுக்கியது. எழுச்சித் தமிழர் ஒலிபெருக்கியைப் பிடித்து, இன்றைக்கு முக்கியமான செய்தியை அறிவிக்கிறேன், விழுப்புரம் தொகுதியின் வேட்பாளரை இப்போது அறிமுகப்படுத்து கிறேன் என்று சொல்லிவிட்டு ‘நீதியரசர் சாமிதுரை’யை கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். கூட்டம் நீதியரசரை வாழ்த்தியது.
பின்னர் ஆவண மையத்தின் மாநிலத் துணைச்செயலாளர் தமிழ் ஒளி ஒருங்கிணைப்பில் ‘எரிமலை' என்கிற தேர்தல் பரப்புரைப் பாடல் கள் அடங்கிய குறுந்தகட்டினை சுபவீ வெளியிட தலையாரி பெற்றுக்கொண்டார். ம.தா.பொன் னரசு இசையில், கவிஞர் இளமாறன் பாடல்களில் தயாரான ‘திருப்புமுனை’ என்கிற தேர்தல் பரப்புரைப் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினை நீதியரசர் சாமிதுரை வெளியிட பேராசிரியர் சுபவீ, பாவலர் அறிவுமதி பெற்றுக்கொண்டனர். மேலும், அகரன், முதல்வன் முயற்சியில் உருவான வாசைரஅய.நேவ என்ற இணையத்தளத்தை பொதுச் செயலாளர் கலைக்கோட்டுதயம், மாநிலப் பொருளாளர் முகமதுயூசுப் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
ஓவியர் செந்தமிழரசு இயக்கத் தில் வெளியான ‘அரளிப் பூக்கள்’ என்கிற குறும்படத்தை எழுச்சித் தமிழர் வெளியிட்டார். ஜெகன் இயக்கத்தில் ஈழப் பிரச்சினையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘ஈழத்து வீடு’ என்கிற குறும் படத்தை தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட அன்னை தாமரை பெருஞ்சித்திரனார் பெற்றுக்கொண் டார். பின்னர், தீர்மானங்களை எழுச்சித் தமிழர் பலத்த கரவொலி களுக்கிடையே வாசித்தார்.
வெளியீட்டு நிகழ்வுக்குப் பிறகு விருதுகள் வழங்கும் நிகழ்வு தொடங்கியது.
‘அம்பேத்கர் சுடர்' விருதை பாவலர் அறிவுமதியும்,

‘அயோத்திதாசர் ஆதவன்' விருதை மறைந்த அன்பு பொன் னோவியம் சார்பில் அவரது மகன் ஆதிமன்னனும்,
‘பெரியார் ஒளி' விருதை பேராசிரியர் சுப.வீர பாண்டியனும்,
‘காயிதேமில்லத் பிறை' விருதை சிறைப்பட்டிருக்கும் குணங்குடி அனீபா சார்பில் அவரது மகன் அமீர்சுல்தானும்,
‘செம்மொழி ஞாயிறு' விருதை மறைந்த பாவல ரேறு பெருஞ்சித்திரனார் சார்பில் அவரது துணைவியார் தாமரை பெருஞ்சித்திரனாரும் பெற்றுக் கொண்டனர்.
‘காமராசர் கதிர்' விருதை தமிழருவி மணியன் பெற மேடைக்கு வந்திருந்தார். ஆனால், அவசர பணி காரணமாக பேராசிரியர் சுபவீ, பாவலர் அறிவுமதி ஆகியோரி டம் சொல்லிவிட்டுவிடை பெற்றார்.
விருதுபெற்ற அறிஞர் பெருமக் களுக்கு எழுச்சித்தமிழர் சால்வை அணிவித்து ரூ.50,000 ரொக்கப் பணமும் கொடுத்து வாழ்த்தினார். தேர்தல் நேரத்தில் கூட்டம் 10 மணிக் குள் முடிக்க வேண்டும் என்பதால், விருது பெற்றோர் சார்பாக பேரா.சுபவீ, பாவலர் அறிவுமதி ஆகியோர் மட்டுமே உரையாற்றினார்கள். நிறை வாக, எழுச்சித்தமிழர் சிறைப்புரை யாற்றினார். 10 மணிக்குக் கூட்டம் முடிந்தாலும் தோழர்கள் தேர்தல் நிதியை 12 மணி வரை சளைக்காமல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக் காய் தமிழகத்தில் ஒளிரும் எழுச்சித் தமிழரின் செயல்பாடுகள் பெரும் நம்பிக்கையாய் இருப்பதன் சாட்சிதான் இந்நிகழ்வு. உண்மையாய் உழைக்கும் எழுச்சித்தமிழரின் உணர்வுகள் தில்லையில் நிலை கொள்ளும் என்பதில் அய்யமே இல்லை..
பின்னர் ஆவண மையத்தின் மாநிலத் துணைச்செயலாளர் தமிழ் ஒளி ஒருங்கிணைப்பில் ‘எரிமலை' என்கிற தேர்தல் பரப்புரைப் பாடல் கள் அடங்கிய குறுந்தகட்டினை சுபவீ வெளியிட தலையாரி பெற்றுக்கொண்டார். ம.தா.பொன் னரசு இசையில், கவிஞர் இளமாறன் பாடல்களில் தயாரான ‘திருப்புமுனை’ என்கிற தேர்தல் பரப்புரைப் பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டினை நீதியரசர் சாமிதுரை வெளியிட பேராசிரியர் சுபவீ, பாவலர் அறிவுமதி பெற்றுக்கொண்டனர். மேலும், அகரன், முதல்வன் முயற்சியில் உருவான வாசைரஅய.நேவ என்ற இணையத்தளத்தை பொதுச் செயலாளர் கலைக்கோட்டுதயம், மாநிலப் பொருளாளர் முகமதுயூசுப் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
ஓவியர் செந்தமிழரசு இயக்கத் தில் வெளியான ‘அரளிப் பூக்கள்’ என்கிற குறும்படத்தை எழுச்சித் தமிழர் வெளியிட்டார். ஜெகன் இயக்கத்தில் ஈழப் பிரச்சினையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘ஈழத்து வீடு’ என்கிற குறும் படத்தை தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட அன்னை தாமரை பெருஞ்சித்திரனார் பெற்றுக்கொண் டார். பின்னர், தீர்மானங்களை எழுச்சித் தமிழர் பலத்த கரவொலி களுக்கிடையே வாசித்தார்.
வெளியீட்டு நிகழ்வுக்குப் பிறகு விருதுகள் வழங்கும் நிகழ்வு தொடங்கியது. ‘அம்பேத்கர் சுடர்' விருதை பாவலர் அறிவுமதியும், ‘அயோத்திதாசர் ஆதவன்' விருதை மறைந்த அன்பு பொன் னோவியம் சார்பில் அவரது மகன் ஆதிமன்னனும், ‘பெரியார் ஒளி' விருதை பேராசிரியர் சுப.வீர பாண்டியனும், ‘காயிதேமில்லத் பிறை' விருதை சிறைப்பட்டிருக்கும் குணங்குடி அனீபா சார்பில் அவரது மகன் அமீர்சுல்தானும், ‘செம்மொழி ஞாயிறு' விருதை மறைந்த பாவல ரேறு பெருஞ்சித்திரனார் சார்பில் அவரது துணைவியார் தாமரை பெருஞ்சித்திரனாரும் பெற்றுக் கொண்டனர். ‘காமராசர் கதிர்' விருதை தமிழருவி மணியன் பெற மேடைக்கு வந்திருந்தார். ஆனால், அவசர பணி காரணமாக பேராசிரியர் சுபவீ, பாவலர் அறிவுமதி ஆகியோரி டம் சொல்லிவிட்டுவிடை பெற்றார்.

|