நச்சுக் குண்டு வீசி

ஈழத் தமிழினத்தை அழிக்க

இராஜபக்சே சதித்திட்டம்!

 

தில்லைத் தீவில் பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியிலும் சிங்கள இனவெறிப் படை நச்சுப் புகைக் குண்டுகளை வீசி பொதுமக்களைக் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்து வருகிறது. இரண்டாம் உலகப் போரின்போதுகூட செய்வதற்கு அஞ் சிய கொடூரத்தை சிங்கள இனவெறியன் இராஜபக்சே செய்து, ஈவிரக்கமின்றி ஈழத் தமிழினத்தை அழித்து வருகிறான்.

இந்த நிலையிலும் இந்தியா உள்ளிட்ட சர்வ தேசச் சமூகம் அமைதி காத்து வேடிக்கை பார்ப்பது நெஞ்சைப் பதறவைக்கும் கொடுமையாக உள்ளது.


அண்மையில், பாதுகாப்பு வளையம் பகுதியில் நச்சுப்புகைக் குண்டுகளை வீசியதில் 400க்கு மேற்பட்ட வர்கள் பலியாகியுள்ளனர்.

மேலும், புலிகள் சரணடை யாவிட்டால் முல்லைத் தீவில் சிக்கித் தவிக்கும் ஒட்டு மொத்தத் தமிழர்களையும் நச்சுப்புகைக் குண்டுகளை வீசி அழித்தொழிக்கப் போவதாக இராஜபக்சே கொக் கரித்துள்ளான். இதன் பின்னணியில் இந்திய அரசின் கைகளும் உள்ளன என்று சர்வதேச அளவில் பேசப் படுகிறது. கொலை வெறிபிடித்த இராஜபக்சேவின் இந்த

பிணம் திண்ணும் இராஜபக்சேவே!
எம் இனத்தை
கொல்லாதே


ச்சுப்புகை வீசி தமிழினத்தையே  அழித்தொழிக்கும் சிங்கள இனவெறியன் ராஜபக்சேவைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் சென்னையில் 9.4.2009 அன்றும் 10.4.2009 அன்று தமிழகமெங்கிலும் ஆர்ப் பாட்டம் நடத்த எழுச்சித்தமிழர் அறிவித்தார். சென்னை அரசு பொது மருத்துவமனை எதிரில் காலை 11 மணி யளவில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்கள் வீரமுத்து, கபிலன், இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளஞ் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மைய சென்னை மாவட்டச் செய லாளர் இரா.செல்வம், முற்போக்கு மாணவர் கழகத்தின் மைய சென்னை மாவட்டச்செயலாளர் சேத்துப்பட்டு இளங்கோ ஆகியோர் ஆர்ப்பாட்டத்தினை ஒருங் கிணைத்தனர்.

எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வந்ததும் இனவெறிக்கெதிரான சிங்கள அரசை எதிர்த்து முழக்கம் எழுப்பினார். எழுச்சித்தமிழர் முழக்கமிட முழக்கமிட சிறுத்தைகள் முழக்கமிட்டனர். பாவலர் அறிவுமதி, உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் இரா. ஜனார்த்தனம், சுபா.இளவரசன் ஆகியோரின் கண்டன உரைக்குப் பின்னர், இராஜபக்சே அரசைக் கண்டித்தும் இந்திய அரசின் ஆதரவுப்போக்கைக் கண்டித்தும் எழுச்சித் தமிழர் நிறைவுரையாற்றினார்.

 

முகப்பு

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann