பெறுதல்:
தலைமைச்செயலகம்,
சென்னை.
அய்யா, வணக்கம்.
பொருள்: செங்கல்பட்டு சிறப்பு முகாம் - ஈழத்தமிழர்கள் விடுதலைகுறித்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ள 55 பேரில் ‘வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளன’ என்னும் அடிப்படையில் சிறைப்பட்டிருப்பவர்கள் மட்டுமின்றி, வழக்குகளே இல்லாத நிலையிலும், தண்டனைக் காலம் முடிந்த நிலையிலும் ஏராளமானவர்கள் உள்ளனர்.
இந்நிலையில், தண்டனைக் காலத்தை கழித்தவர்களையும், சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டிருப்பவர்களையும் விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி அம்முகாமில் உள்ளவர்கள் கடந்த இரண்டு வார காலமாக தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வழக்குகளில் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் மற்றும் தண்டனைக் காலத்தை கழிக்க வேண்டியவர்கள் ஆகியோரை திறந்தவெளிச் சிறைச் சாலைகளில் தங்கவைக்க வேண்டுமெனவும் கோரியுள்ளனர். அவர்தம் இக்கோரிக்கைகளில் உள்ள ஞாயத்தை உணர்ந்து கருணை செய்து அவற்றை நிறைவேற்றுமாறு விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் கண்டவர்களில், சந்தேகத்தின் பெயரில் சிறைப்பட்டிருப்பவர்களும், தண்டனைக் காலத்தைக் கழித்தவர்களும் உள்ளனர். எனவே, இவர்கள் மீது கருணை செய்து உடனடியாக விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், வழக்குகளில் விசாரிக்கப்பட வேண்டியவர்களையும் தண்டனைக் காலத்தை கழிக்க வேண்டியவர்களையும் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து மாற்றி திறந்தவெளி சிறைகள் அல்லது பொது முகாம்களில் தங்கவைக்க ஆவன செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.
செங்கற்பட்டு சிறப்பு முகாமில் சிறைப்பட்டுள்ளவர்கள்
முகமது ருக்சன்(23), துஷ்யந்தன் (எ) ரமேஷ்(23), சத்தியசீலன்(21), விக்னேஷ்வர்(24), ராசக்குமார்(35) அருண்(24), அருண் ஞானதாஸ்(25), பொனிபாஸ்(27), மகேஷ்வரன்(54 ), சிவகரன்(39), செல்வசேந்தன்(40), யோகராஜா(25), சதீஷ்(27), பாரதிதாசன்(24), முத்து (30), ஜெயமோகன் (எ) சையந்தன்(26), கங்காதரன்(40), நாதன் (எ) பரமேஷ்வரன் (35), சிவராமன்(29), பாலமுருகன்(24), பகிதரன்(29)பிரதீபன்(32) கண்ணா(40), செல்வக்குமார்(32), நவநீதகிருஷ்ணன்(36) இலங்கைநாதன்(42), எட்வர்ட் ஜெயக்குமார்(26), விஜயநீதன்(27), கிருஷ்ணநீதன்(25), இரமணன்(32), வத்சானந்த்(24), ஜெயராஜா(27), பத்மராஜா(24), சென்ஜேன்ஸ்(47), ஜெயக்குமார்(37), டேனியல்(43), சேகர்(29), முருகானந்தம்(28), செல்வகுமார் (32), ஜெயதாசன்(32), விஜய்(24), அசார் நசீர்(29), உமாரமணன்(25), அமலன்(28) பிரேம்குமார்(28), பூமிநாதன்(56), ஆறுமுகம்(60) முகமது ரியாஸ்(26) முகமது அக்ரம்(60), ஜெயபால்(40), கனகரத்தினம்(40), மேகவண்ணன்(40), தங்கம்(40), ரெஜினால்டு(26)
நன்றியுடன்...
இவண்,
(தொல்.திருமாவளவன்)