வதை முகாம்களில் சிக்கி கொடுமைக்குள்ளாக்கப்படும் ஈழத்தமிழ்ச் சொந்தங்களை சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் தொடர் போராட்டங் களை தமிழகம் முழுக்க மாபெரும் இயக்க மாகவே நடத்தி வருகின்றனர்.
எழுச்சித்தமிழரின் வழிகாட்டுதல்படி இயக்கத்தின் துணைநிலை அமைப்புகள் இப்போராட் டங்களை முன்னெடுத்துச்செல்கின்றன. அந்த வகையில், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை சார்பில் கடந்த 17.9.2009 அன்று சென்னை மெமோரியல் அரங்கு முன் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மைய சென்னை மாவட்டச் செயலாளர் இரா.செல்வம் தலைமை தாங்க, கட்சியின் மாவட்டச்செயலாளர் கள் வழக்கறிஞர் வீரமுத்து, வழக்கறிஞர் கபிலன், இளஞ்செழியன் மற்றும் இரவிசங்கர், அம்பேத்வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகம் முழுக்க இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் நிர்வாகிகள் கலந்துகொண்டு முழக்க மிட்டனர்.
பொதுச்செயலாளர் கா.கலைக்கோட்டுதயம், வன்னிஅரசு, பொதினிவளவன், ஆர்வலன், மடிப் பாக்கம் வெற்றிச்செல்வன், சிந்தனைவளவன், தமிழ் வாணன், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, இளஞ் சேரன், திரைப்பட இயக்குநர் குகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்ட உரை நிகழ்த் தினர். “வதை முகாம்களில் சிக்கியிருக்கும் தமிழர் களை மீட்டெடுப்போம்” என்கிற சிறுத்தைகளின் முழக்கம் ஆதிக்க அரசுகளின் செவிப்பறையை கிழித்தது. ட
ளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசiறையைத்
தொடர்ந்து தமிழ்த்தேசிய விடுதலைப் பேரவையின் சார்பில் கடந்த 5.10.2009 மாலை 2 மணியளவில் மெமோரியல் அரங்கு முன் ஆர்ப் பாட்டம் நடைப்பெற்றது. தமிழ்த்தேசிய விடுதலைப் பேரவையின் மைய மாவட்டச்செயலாளர் வீர. தமிழ்ச்செல்வன் தலைமைதாங்க கட்சியின் மாவட்டச்செயலாளர்கள் வழக்கறிஞர் வீரமுத்து, வழக்கறிஞர் கபிலன், இளஞ்செழியன், அ.பாலசிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கா.கலைக்கோட்டுதயம் நீலவானத்து நிலவன், தமிழ்க்குமரன், புதுக்கோட்டை பாவாணன், வா.வனச்செழியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
நிறைவாக, எழுச்சித்தமிழர் உரையாற்றினார். சிங்கள - இந்திய கூட்டுச்சதியை போட்டு டைத்தார். மேலும் தமிழக உளத்துறை விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக செயல்படுவதையும் கண்டித்து பேசினார். ஆயிரக்கணக்கான பெண்களும், சிறுத்தைகளும் திரண்டுவந்து சிங்கள கொடுநெறியாளர்களுக்கு எதிராக முழக்கமிட்டனர்.