| |
|
 |
| |
|
நிர்வாணம் கொள்கிறேன் நானும்!
|
- அம்பேத்கர் சுடர் இன்குலாப்
|
|
|
|
கண்ணீரில் நனைந்து
குருதியில் சிவந்து
பெருமூச்சில் உலர்ந்த சொற்கள்...
நெருப்பில் வெந்த சொற்கள்...
தோட்டாக்கள் உதிர்த்து
வெள்ளைக் கொடி அசைத்து
அமைதி வேண்டிய சொற்கள்...
எதுவும் உறுத்தவில்லை
தில்லியையோ
கொழும்பையோ
உலகையோ...
திசை எட்டும் சிதறினும்
நம்பிக்கையோடு
என்திசை நோக்கிய
ஈழமுகங்களே!
எதிர்கொள்ளும் முகமில்லை எனக்கு
தேறுதல் சொல்லத் தமிழில்லை
தருவதற்கு ஒன்றுமில்லை
கூசிக் கவிழும் முகத்திலிருந்து
சொரியும்
கண்ணீர்க் கோடுகளைத் தவிர
தலைகுனிகிறேன்
உங்களைக் கொலை செய்த
கருவிகளின் கொள்முதலில்
என்வரிப் பணமும் இருந்த
இழிசெயலுக்காக!
உங்கள் மீது பாய்ந்த
ஒருகுண்டைக் கூடத் தடுக்க முடியாத
என் சொற்களுக்காக!
இன்று
துகிலுரித்துத் தளைத்துச்
சப்பாத்துக் காலால் தலைமிதித்து
வல்லாங்குச் செய்து கொன்று
வெறிதீர்க்கும் கொடுமையைக் கண்டு
வெள்ளையும் சள்ளையுமாய் உடுத்தித்
தன்மானம் தருக்கும்
தமிழ்நாட்டில் வாழ்வதற்காய்
நிர்வாணம் கொள்கிறேன்
நானும்...! |
முகப்பு |
|
 |
எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann